பூந்தமல்லி: சிறையில் உண்ணாவிரதம் இருந்த கைதி மருத்துவமனையில் அனுமதி!

பூந்தமல்லி: சிறையில் உண்ணாவிரதம் இருந்த கைதி மருத்துவமனையில் அனுமதி!
X

பூந்தமல்லி சிறைச்சாலை.

பூந்தமல்லி சிறப்பு சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட கைதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் மேலதூண்டில் விநாயகம் பெட்டியை சேர்ந்தவர் பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் (45). மதமாற்றத்தை கண்டித்த போது கடந்த 2019ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட திருபுவனம் நிஜாம் அலி (33) பூந்தமல்லி சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் வேறு ஒரு மத்திய சிறைக்கு மாற்றக் கோரியும், செல்லிடப் பேசியில் பேச அனுமதிக்க கோரியும், சிறையில் நல்ல உணவு வழங்க கோரியும் கடந்த 31ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வந்தார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!