பூந்தமல்லி: கடையை காலி செய்ய கோரி தகராறு செய்த திமுக பிரமுகருக்கு கத்தி குத்து

பூந்தமல்லி: கடையை காலி செய்ய கோரி தகராறு செய்த திமுக பிரமுகருக்கு கத்தி குத்து
X

தகராறு நடந்த இடம் (பைல் படம்)

பூந்தமல்லியில் கடையை காலி செய்ய கோரி தகராறு செய்த திமுக பிரமுகரை கத்தியால் குத்திவிட்டு போலீசில் சரணடைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லியில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலின் அருகிலேயே சிறிய அளவிலான கடைகள் செயல்பட்டு வருகிறது.

தற்போது அந்த ஓட்டலின் உரிமையாளர் இந்த இடத்தை வாங்கி கடைகளை அகற்றிவிட்டு அங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்ய முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த இடத்தில் வியாபாரம் செய்து வரும் ஜெயேந்திர குமார் இன்று வழக்கம்போல அவர் கடையில் இருக்கும் போதே அந்த கடையை காலி செய்வதற்காக சிலர் அங்கு வந்துள்ளனர்.

இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் ஜெயேந்திர குமார் கடையில் இருந்த கத்தியை எடுத்து காட்டுப்பாக்கத்தில் சேர்ந்த நித்திஷ் என்பவரது வயிற்றில் குத்திவிட்டு உடனடியாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் சென்று சென்று சரணடைந்தார்.

இதனை அடுத்து காயமடைந்த நித்திஷை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் ஜெயேந்திர குமாரிடம் விசாரணை செய்து வருகின்றனர் மேலும் கத்தி குத்து ஏற்பட்ட நித்திஷ் திமுக பிரமுகர் என்பதாக கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக தொழில் செய்து வந்த கடையைத் அகற்றுவதற்கு முற்பட்டதால் திமுக பிரமுகரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!