பூந்தமல்லி: கொரோனா நிவாரணம் பெறவந்தவர்களுக்கு முக கவசம், கிருமி நாசினி

பூந்தமல்லி: கொரோனா நிவாரணம் பெறவந்தவர்களுக்கு முக கவசம், கிருமி நாசினி
X

பூவிருந்தவல்லியில்  கொரோனா நிவாரண நிதி பெறவந்த பொதுமக்களுக்கு திமுக சார்பில் முக கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது.

பூவிருந்தவல்லியில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி பெறவந்த பொதுமக்களுக்கு திமுக சார்பில் முக கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது.

கொரோனா நிவாரண நிதியாக தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு குடும்ப அட்டைதாரரகளுக்கு 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பூவிருந்தவல்லியில் நகரச் செயலாளர் ரவிகுமார் தலைமையில் கொரோனா நிவாரணத் தொகை பெற வரும் பொதுமக்களுக்கு முக கவசம், கிருமி நாசினி மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டது. இதனை பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணாசாமி வழங்கினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!