புதிய அங்கன்வாடி மைய திறப்பு விழா..!

புதிய அங்கன்வாடி மைய திறப்பு விழா..!
X

புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த எம் எல் ஏ கிருஷ்ணசாமி.

குருவாயல் கிராமத்தில் ரூபாய் 15.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி திறந்து வைத்தார்.

பூந்தமல்லி அருகே குருவாயல் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி, எல்லாபுரம் ஒன்றியம் குருவாயல் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்15 லட்சத்து 50.ஆயிரம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்த அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார்.


எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் தங்கம் முரளி, மாவட்டத் துணைச் செயலாளர் வி.ஜே. சீனிவாசன், பொருளாளர் பி.ஜி.முனுசாமி, மாவட்ட பிரதிநிதிகள் தாமரைப்பாக்கம் பாஸ்கர், கோடு வெளி அன்பு, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட்டம்மா, ஒன்றிய குழு உறுப்பினர் தட்சிணா மூர்த்தி, ஆகியோர் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் நிர்வாகிகள் ராஜேஷ், ஜெகன்,லோகநாதன், வெங்கல் ரஜினி, விஜயகுமார்,காசி, நாராயணசாமி, மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்