புதிய மின்மாற்றி, பகுதி நேர நியாய விலைக் கடை : எம்எல்ஏ திறந்து வைத்தார்.

புதிய மின்மாற்றி, பகுதி நேர நியாய விலைக் கடை : எம்எல்ஏ திறந்து வைத்தார்.
X

புதிய மின்மாற்றியையும் பகுதிநேர ரேஷன் கடையையும் திறந்து வைத்த எம்எல்ஏ 

பூந்தமல்லி அருகே புதிய மின்மாற்றி, பகுதி நேர நியாய விலைக் கடையை சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்

பூந்தமல்லி அருகே செம்பேடு கிராமத்தில் புதிய மின்மாற்றி மற்றும் வெங்கல் கிராமத்தில் பகுதிநேர புதிய ரேஷன் கடையை பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பேடு கிராமத்தில் புதிய மின்மாற்றி இயக்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கோடு வெள்ளி தங்கம் முரளி தலைமை வகித்தார் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார்

இதனைத் தொடர்ந்து வெங்கல் கிராமத்தில் புதிய பகுதிநேர ரேஷன் கடையை தொடங்கி வைத்தார். சுமார் 10,000-க்கும் மேற்பட்ட வசித்து வரும் வெங்கல் கிராமத்தில் 1416 ரேஷன் அட்டைகள் உள்ளன மக்கள் வெங்கல் பஜார் பகுதியில் இயங்கி வந்த கடையில் இப்பகுதி மக்கள் சென்று நீண்ட நேரம் காத்திருந்து அரிசி, பருப்பு,கோதுமை, மண்ணெண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் வாங்கி செல்வார்கள். இந்த நிலையில் வெங்கல் சீதம் ஜேரி பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று காத்திருந்து பொருட்களை வாங்கும் நிலை இருந்து வந்தது

இந்த நிலையில் தாங்கள் பகுதிக்கு புதிய பகுதி நேர நியாய விலை அமைத்து தர வேண்டும் என்று பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கோரிக்கையை ஏற்று சீதம் ஜேரி பகுதியில் புதிய பகுதிநேர ரேஷன் கடையை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசுவாமி. பங்கேற்று பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்

அப்போது அவர் பேசுகையில், மக்களுக்கான ஆட்சி திமுக தான். மக்களுக்காக ஒவ்வொரு திட்டத்தையும் சிந்தித்து செயல்படும் ஆட்சி திமுக தான் என்று அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் குமார், ஒன்றிய அவைத்தலைவர் முனுசாமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெங்கல் நாகலிங்கம், சுப்பிரமணி, உமா சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி பாஸ்கர், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் டேவிட், ரஜினி, வெங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி ராணி லிங்கன், நிர்வாகிகள் சுப்பிரமணி, சேரா சேகர், சுரேஷ், அண்ணாமலை, சேட்டு, சுரேஷ், ஜெகன், ஸ்ரீதர், சுந்தர்ராஜ், செம்பேடு செல்வம், செம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!