சைக்கிள் ஓட்டி வழி தவறிய சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு..!
சைக்கிளில் நீண்டதூரம் சென்றுவிட்டதால் வீட்டுக்கு வரும் வழியை மறந்த சிறுவன்.
பூந்தமல்லி அருகே சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த சிறுவன் நீண்ட தூரம் சென்றுவிட்டதால் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரும் வலி தெரியாமல் தவித்தான். அந்த சிறுவனை மீட்டு 2 மணி நேரத்தில் பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி பஸ் நிலையம் அருகே சைக்கிளில் வந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன் தனது வீடு எங்கு உள்ளது என்று தெரியாமல் அங்கும் இங்குமாக சுற்றியபடி இருந்தான். இதனை கண்டதும் அங்கிருந்து ஆட்டோ ஓட்டுனர்கள் அந்த சிறுவனை பிடித்து விசாரித்த போது தாத்தா என்ற வார்த்தையை தவிர வேறு எந்த வார்த்தையும் அவனால் சொல்ல முடியவில்லை.
மேலும் அவனது முகவரி எங்கு என்று கேட்டபோதும் சிறுவனால் சொல்ல முடியாததால் சைக்கிளை ஓட்டி சென்றால் அவனது வீட்டிற்கு செல்வான் என சிறிது தூரம் சைக்கிளை அந்த சிறுவன் ஓட்ட அங்கிருந்து ஆட்டோ ஓட்டுனர்கள் பின்னால் சென்றனர். ஆனால் அந்த சிறுவனுக்கு வீடு இருக்கும் திசை தெரியாததாலும் முகவரியை சொல்ல முடியாததாலும் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் சிறுவன் முகவரி குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்த நிலையில் சிறுவனின் முகவரி கிடைக்காததால் ஒருவர் தனது மகனை காணவில்லை என போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து காணாமல் போன சிறுவனின் அடையாளம் குறித்து கூறியபோது தனது மகன் என அந்த தம்பதியினர் கூறியதையடுத்து பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து சிறுவனின் பெற்றோரிடம் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வீட்டிலிருந்து சைக்கிள் ஓட்டியபடி ஜாலியாக நீண்ட தூரம் மெய்மறந்து சென்ற வந்த சிறுவனுக்கு மீண்டும் வீட்டுக்குத் திரும்பும் வழி தெரியாமல் போய்விட்டது.
வீட்டின் முகவரி தெரியாமல் தவித்த சிறுவனை போலீசார் சிறுவனை மீட்டு 2 மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu