நுகர்வோர் செலுத்திய ரூ.28 லட்சம் கையாடல்: மின் ஊழியர்களுக்கு ஓராண்டு சிறை
படம்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே மின்நுகர்வோர் கட்டிய ரூ.28 லட்சம் பணத்தை கையாடல் செய்த மின்வாரிய ஊழியர்கள் 2 பேருக்கு ஓராண்டு சிறைதண்டனை விதித்து பூந்தமல்லி நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பூந்தமல்லி அடுத்த வளசரவாக்கத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, மின் கணக்கீட்டு ஆய்வாளராக கணபதி, மின் கணக்கீட்டாளராக சிவப்பிரகாசம், மேற்பார்வையாளராக சாகுல் ஹமீது ஆகியோர் பணியாற்றுகின்றனர் .
இவர்கள், கடந்த 2003ம் ஆண்டு பொதுமக்களிடமிருந்து மின்வாரியத்திற்கு பெறப்பட்ட மின் கட்டணம், புது மீட்டர் உள்ளிட்ட ரூ.28.5 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக . இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர், சென்னை மத்திய குற்றப்பிரிவு நம்பிக்கை மோசடி ஆவண தடுப்பு பிரிவில் புகார் செய்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, மின்நுகர்வோர் மின்வாரியத்துக்கு செலுத்திய பணம் ரூ.25 லட்சத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டர். இதுதொடர்பான வழக்கு விசாரணை பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டாலின், மின்வாரிய ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கணபதிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும், சாகுல் ஹமீதுக்கு ஓராண்டு சிறையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையில் இருக்கும்போது சிவப்பிரகாசம் இறந்துவிட்டதால் அவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu