எல்லாபுரம் ஒன்றிய திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் நாசர்

எல்லாபுரம் ஒன்றிய திமுக  உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் நாசர்
X
திருவள்ளூர் மத்திய மாவட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டு பேசினார்..

திருவள்ளூர் மத்திய மாவட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் தாமரைப்பாக்கத்தில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி.சா. மு.நாசர் கலந்துகொண்டு பேசினார் ..

திருவள்ளூர் மத்திய மாவட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் வெங்கல் அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கோடு வெள்ளி தங்கம் முரளி தலைமை தாங்கினார், அனைவரையும் மாவட்ட பிரதிநிதி பாஸ்கர் வரவேற்றார்,

மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர்.குமார், ஒன்றிய அவைத்தலைவர் பி.ஜி.முனுசாமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் இ.சுப்பிரமணி, வெங்கல் நாகலிங்கம், உமா சீனிவாசன், ஒன்றிய பொருளாளர் லோகநாதன், மாவட்ட பிரதிநிதி, ஜி.பாஸ்கர், வழக்கறிஞர் கே.ஜி.அன்பு, ஸ்ரீதர், நாராயணசாமி, சுப்பிரமணி,,ஆளவந்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும் தமிழக பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி. சா. மு.நாசர், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ, கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்

நிகழ்ச்சியில் அமைச்சர் ஆவடி சாமு நாசர் பேசியதாவது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற தொண்டர்கள் அயராமல் உயர்த்திட வேண்டும் வேண்டும்.

கடந்த காலங்களில் கருணாநிதி எப்படி நாட்டின் பிரதமரையும் ஜனாதிபதியும் தேர்வு செய்தாரோ அதேபோன்று முதல்வர் ஸ்டாலினும் யாரை அடையாளம் காட்டுகிறாரோ அவர்தான் இந்த நாட்டின் பிரதமராகவும் குடியரசுத் தலைவராகவும் வரவேண்டும். அதற்கு நாமெல்லாம் அவருடைய கரத்தை வலுப்படுத்த ஒற்றுமையாக இணைந்து பணியாற்றிட வேண்டும்.

மேலும் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்ப்பது, அனைத்து பொறுப்புகளிலும் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் அயராது உழைக்கும் தொண்டர்களுக்கு பதவிகள் நிச்சயம் தேடி வரும் என்று இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜே.ரமேஷ், மாநில மாணவரணி இணை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட கழக நிர்வாகிகள் ஆசிம் ராஜா, தேசிங்கு, ராமகிருஷ்ணன், ஜெயசீலன், பிரேம் ஆனந்த் ராஜி, ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதரன், நரேஷ் குமார், தேசிங்கு, ராமகிருஷ்ணன், பவுல், டேவிட், ரஜினி, மற்றும் எல்லாபுரம் மத்திய ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் காஞ்சனா முனுசாமி, கோபிநாத், கணேசன், கஜா, கணேசன், ரகு, பாஸ்கர், சேகர், சீனிவாசன், விஜயகுமாரி, சார்லஸ், அச்சுதன், சத்யா, கண்ணன், ராஜேஷ், ஜெகநாதன், செம்பேடு செல்வம், உட்பட பிற அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

முடிவில் இளைஞரணி அமைப்பாளர் கொமக்கம்பேடு சரத்குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!