ஆவடி- மேல் செம்பேடு கிராமம் இடையே மகளிர் இலவச பேருந்து சேவை.. அமைச்சர் நாசர் துவக்கம்...
புதிய வழித்தடத்தில் மகளிர் இலவச பேருந்து சேவையை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல் செம்பேடு, காதர் வேடு ஆகிய கிராமங்களில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகவே பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் பொது மக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் என அனைவரும் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாகல்மேடு வரை நடந்து சென்று அங்கிருந்து திருவள்ளூர், ஆவடி, வெங்கல், சென்னை, செங்குன்றம், உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்ல பேருந்துகளில் ஏறி பயணம் செய்கின்றனர்.
பல ஆண்டு காலமாக தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி செய்து தரக் கோரி அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, கடந்த வாரம் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் இலவச மகளிர் பேருந்தை பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மக்கள் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து வைத்து துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து கிராமத்திற்கு இரண்டாவது பேருந்தாக அரசு மகளிர் இலவச மாநகர பேருந்தை செம்பியில் இருந்து ஆவடி வரை செல்லும் தடம் எண் எ-80 பேருந்து சேவையை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கோடு வெள்ளி தங்கம் முரளி தலைமை வகித்தார் . மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் எகுமார், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கல் பாஸ்கர், தாமரைப்பாக்கம் பாஸ்கர், ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய அவைத் தலைவர் முனுசாமி, வெங்கல் நாகலிங்கம், லோகநாதன் சுப்பிரமணி, ஆளவந்தான், உமா சீனிவாசன், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, ஆகியோர் பங்கேற்று மாநகரப் பேருந்து சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்து பேருந்தில் ஏறி பயண சீட்டு வாங்கி. பாகல்மேடு வரை பயணம் செய்தனர். 40 ஆண்டுகள் காலமாக பேருந்து வசதி இல்லாத செம்பேடு கிராமத்திற்கு இரண்டு பேருந்து சேவையை வழங்கிய தமிழக முதல்வருக்கும், பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர், சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு அந்தப் பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாம், பொது மேலாளர் செல்வன், பொது மேலாளர் (வடக்கு) செல்வம். துணை மேலாளர் ரவீந்திரன், மண்டல மேலாளர் அண்ணாநகர் சரக எட்வின், துணை மேலாளர் குமார், கிளை மேலாளர் அன்பரசு, மாம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், கிளைச் செயலாளர் மனோகரன், வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப அணி சேர்ந்த செம்பேடு செல்வம், நிர்வாகிகள் ராஜி,ஜெகன், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu