பூந்தமல்லி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை..!

பூந்தமல்லி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை..!
X

கொள்ளையடிக்கப்பட்ட வீடு 

பூந்தமல்லி அருகே திருவேற்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்கம், 50,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவேற்காட்டில் வீட்டில் பூட்டை உடைத்து 100 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை

பூந்தமல்லி:

திருவேற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகை மற்றும் 50,000 பணம் கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே திருவேற்காடு அயனம்பாக்கம், ஈஜிபி நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன்( வயது 45). இவர் வெளிநாட்டில் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கோகிலா ( வயது 40). இவர்களுக்கு பவதாரணி என்ற ஒரு மகள் உள்ளார். ஜனார்த்தனன் கடந்த மார்ச் மாதம் தான் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை குடும்பத்துடன் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலுக்கு ஷாப்பிங் செய்வதற்காக சென்று உள்ளனர். பின்னர் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இது குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் திருவேற்காடு போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கை ரேகைகளை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்.

இது குறித்து திருவேற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா