/* */

பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை.

குருவாயல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பழுதடைந்த குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டியை அகற்றி புதிய தொட்டியை கட்டி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை.
X

பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டி 

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் கிராமத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் குருவாயல் சுற்றியுள்ள திருக்கண்டலம், சேத்துப்பாக்கம், காரணி பாட்டை, அழிஞ்சிவாக்கம், அத்தங்கி காவனூர், உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளி வளாகத்தில் சுமார் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி கட்டி சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. இதில் தண்ணீரை சேமித்து காலை, மாலை என இருவேளைகளில் குருவாயல் மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது இந்த தொட்டியின் தூண்களின் கான்கிரீட் உடைந்து ஆங்காங்கு விரிசல் ஏற்பட்டு அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி ஆபத்தான நிலையில் உள்ளது. இந்தத் தொட்டியின் அருகே மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை ஒன்று உள்ளது. அதிக அளவில் மாணவர்கள் நடமாட்டம் இருப்பதால் எந்த நேரத்திலும் சரிந்து இருந்து கீழே விழும் அபாயம் உருவாகி உள்ளது.


எனவே ஆபத்து விளைவிக்கும் முன்பே இந்த குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை அகற்றி புதிய தொட்டியை வேறு இடத்தில் மாற்றி கட்டி தர வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பள்ளியில் பயிலும் மாணவனின் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் அரசு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை தேக்கத்தொட்டியானது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொட்டியாகும். இந்த தொட்டி தற்போது பழுதடைந்து கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து கீழே கொட்டுகிறது. பலமுறை இந்த தொட்டியை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக மாணவர்கள் நலனை கருதி அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

Updated On: 31 Oct 2023 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?