பூந்தமல்லி அருகே பைக்கை அபேஸ் செய்த கில்லாடி வாலிபர் காட்டிக் கொடுத்த சி.சி.டி.வி.கேமிரா

பூந்தமல்லி அருகே பைக்கை அபேஸ் செய்த கில்லாடி வாலிபர் காட்டிக் கொடுத்த சி.சி.டி.வி.கேமிரா
X
பூந்தமல்லி அருகே கடைக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் லாக்கை உடைத்து அபேஸ் செய்த மர்ம நபர்களை சிசிடிவி காட்டிக் கொடுத்தது.

வத்தலகுண்டுவை சேர்ந்தவர் தேவேந்திரன்(20), இவர் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள தனியார் அழகு நிலையத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான ரூ.1.35 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் அவரது நண்பர்களின் மோட்டார் சைக்கிள் என மூன்று மோட்டார் சைக்கிள்கள் கடைக்கு வெளியே நிறுத்தி வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று உடன் வேலை செய்தவர்கள் வெளியே சென்றுவிட்டதால் தேவேந்திரன் மோட்டார் சைக்கிள் மட்டும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது,

கடையின் அருகே நடந்து வரும் மர்ம நபர்கள் இரண்டு பேர் நீண்ட நேரம் போராடி மோட்டார் சைக்கிளின் லாக்கை லாவகமாக உடைத்து அங்கிருந்து தள்ளி கொண்டு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் அளித்ததன் பேரில் பூந்தமல்லி போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி சாலை சந்திப்பு, தீயணைப்பு நிலையம் எதிரே மற்றும் போக்குவரத்து போலீசார் அதிக அளவில் பணியில் உள்ள இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி வாகனங்கள் கொள்ளை போகும் சம்பவத்தால் வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!