ஜெகநாத பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழா..!

ஜெகநாத பெருமாள் கோயில்  ஆனி பிரம்மோற்சவ விழா..!
X

திருமழிசை ஜெகநாத பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம்.

திருமழிசை ஜெகநாத பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் ஏழாம் நாள் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருமழிசை ஜெகநாத பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழா ஏழாம் நாளான இன்று தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து பெருமாளை வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி, திருமழிசை பகுதியில் அமைந்துள்ள திருமழிசை ஜெகநாத பெருமாள் கோயிலில் ஆணி பிரம்மோற்சவ விழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.


சுவாமி திருவீதி புறப்பாடு தினமும் காலை, மாலை இருவேளைகளில் சுவாமியை சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா கருட சேவை. சூரிய பிரபை,சந்திர பிரபை சேஷ வாகனம். மோகினி அவதாரம், அம்ச வாகனம் யானை வாகனம் யாளி வாகனம் உள்ளிட்டவை நடைபெற்றது. ஆனி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தேர் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், குங்குமம், மஞ்சள், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து திருமழிசையின் முக்கிய மாட வீதிகளில் திருத்தேர் பவனி ஆனது நடைபேற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது