கட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க ஜெகன்மூர்த்தி அறிவுரை

கட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க ஜெகன்மூர்த்தி அறிவுரை
X

பூவை ஜெகன்மூர்த்தி

பூவை மூர்த்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்குமாறு ஜெகன் மூர்த்தி அறிவுரை

செப்டம்பர் 2 அன்று பொதுமக்களை சந்தித்து தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக பூவை மூர்த்தி செய்த தொண்டு மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக நடத்திய அற போராட்டங்கள் குறித்து விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்குமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு ஜெகன் மூர்த்தியார் அறிவுரை வழங்கியுள்ளார்.

பொதுக்கூட்டம், கருத்தரங்கம், பட்டிமன்றம் மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மூர்த்தியாரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் பொருட்டு கருத்தரங்கம் மற்றும் கூட்டம் முடித்துவிட்டு பின்பு வர வேண்டும் என்ற கோரிக்கையையும் செய்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!