ஊருக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும் : பொது மக்கள் கோரிக்கை மனு
கடந்த மாதம் பெய்த அதி கன மழை காரணத்தினால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டியது. இதனை அடுத்து பூவிருந்தவல்லி அருகே பாணவேடுதோட்டம் ஏரி நிரம்பி கரைகள் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறி நீர் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
இந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை வெள்ள நீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்புக்குள்ளானது. வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து வருவதால் பாணவேடுதோட்டம்,பிடாரிதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மேல் வெள்ள நீர் வடியாமல் உள்ளது..
இதனால் குழந்தைகள் ,முதியோர் மற்றும் மாற்று திறனாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும் தேங்கியுள்ள நீரில் விஷ ஜந்துங்களும் வருவதால் செய்வது அரியாமல் திகைத்து வருகின்றனர்.இதேபோல் கொசு உற்பத்தியாகி 4 வயது சிறுவன் உட்பட மூவருக்கு டெங்கு மற்றும் டைபாய்ட் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
எனவே உடனடியாக வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூவிருந்தவல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களை சந்தித்து கிராம மக்கள் மனு வழங்கினர்.
அதில் ஒரு வாரத்துக்கு மேல் தங்களது பகுதி வெள்ள பாதிக்கப்பட்டு கடும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும் தேங்கி இருக்கும் மழை வெள்ளத்தை அகற்ற நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu