பூந்தமல்லியில் கொரோனா நிவாரண நிதி: கிருஷ்ணாசாமி எம்எல்ஏ. வழங்கினார்

பூந்தமல்லியில் கொரோனா நிவாரண நிதி:  கிருஷ்ணாசாமி எம்எல்ஏ. வழங்கினார்
X

பூவிருந்தவல்லியில் 2ஆயிரம்  கொரோனா நிவாரண நிதியை எம்.எல்.ஏ கிருஷ்ணாசாமி வழங்கினார்.

பூவிருந்தவல்லியில் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2ஆயிரம் நிவாரண நிதியை எம்.எல்.ஏ. கிருஷ்ணாசாமி வழங்கினார்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அளிக்கும் வகையில் தமிழக அரசு ரூ.4 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து இருந்தது. அதன் முதல் தவணையான குடும்ப அட்டைதார்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் எம்.எல்.ஏ கிருஷ்ணாசாமி வழங்கி துவக்கி வைத்தார். இதனை சமூக இடைவெளியுடன் மக்கள் பெற்று சென்றனர்.

இதில் பூவிருந்தவல்லி ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெய்குமார், ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி வின்சென்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!