பூந்தமல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

பூந்தமல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
X

பூந்தமல்லியில் நடைபெற்ற ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்தில் பேசும் அமைச்சர் பொன்முடி 

பூந்தமல்லியில் நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி ஆவடி நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர்

திருவள்ளூர் மத்திய மாவட்டம் பூவிருந்தவல்லி நகர திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 70 பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பூவிருந்தவல்லி நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை தலைமையில் குமணன் சாவடியில் நடை பெற்றது.

இதில் நகர நிர்வாகிகள் தாஜுதீன், துரைபாஸ்கர், அப்பர் ஸ்டாலின், டில்லிராணி மலர் மன்னன், அசோக்குமார், தாகர், புண்ணியகோட்டி, அன்பழகன், செளந்தரராஜன், அமிதாப் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள். நகர மன்ற தலைவர் காஞ்சனாசுதாகர், துணை தலைவர் ஸ்ரீதர், மாவட்டத் துணைச் செயலாளர் காயத்ரி ஸ்ரீதரன், ஒன்றிய கழகச் செயலாளர் கமலேஷ் தேசிங்கு, முனுசாமி, பரமேஸ்வரி கந்தன், வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்

இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி,அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புறை ஆற்றினர்.

அமைச்சர் நாசர் பேசுகையில், திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் முதலமைச்சரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு 500 க்கும் மேற்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளும்,20 க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களும் நடை பெற உள்ளது. இந்தியாவில் சிறந்த முதல்வராக, முதல்வருக்கெல்லாம் முதல்வராக திகழ்பவர் ஸ்டாலின் தான் என்று நடுநிலை நாளேடுகளும், நடுநிலை அரசியல் கட்சித்தலைவர்களும் பாராட்டுகின்றனர். இன்று அகில இந்தியாவையே வழி நடத்தும் முதல்வராக திகழ்கிறார். இந்தியாவில் தலை சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்றால் உலக அரங்கில் இந்தியாவை தலை சிறந்த நாடாக மாற்ற அவரை தலைமையேற்க அனைவரும் அழைக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் சிறப்புரையாற்றிய அமைச்சர் பொன்முடி பேசும் போது, தமிழ் நாட்டில் உள்ள சம்பிரதாய கொண்டாட்டங்கள் போல் அல்ல முதலமைச்சரின் பிறந்த நாள் கொண்டாட்டம். இது பெரியார்,அண்ணா, கலைஞர் ஆகியோரது திராவிட கொள்கைகளை தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களிடையே கொண்டு செல்லவே இந்த பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது என்றார்.

தமிழ்நாட்டில் பெண்கள் கல்வி கற்க உரிமை மறுக்கப்பட்டு வந்த காலங்களில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் வந்த பிறகுதான் பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை வந்தது. அனைவருக்கும் கல்வி இதுதான் திராவிட மாடால் ஆட்சி. இதன் தொடர்ச்சியாகத்தான் 21 மாத கால ஆட்சியில் 31 கல்லூரிகளை உருவாக்கி சாதனை படைத்து கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் என்றார்.

பெண்கள் படிக்க வேண்டும் அதுவும் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் அடிப்படையில் தான் இன்று புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டு மாதம் 1000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.இது இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத திட்டம், இதேபோல பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பேருந்து வசதி செய்து கொடுத்தவரும் உலகிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் ஒருவர்தான் என்றார்.

கொரோனா காலத்தில் அனைத்து குடும்பத்தினருக்கும் 4000 ரூபாய் வழங்கினார். மருத்துவமும் கல்வியும் தனது இரண்டு கண்கள் என கூறி இரண்டு துறைகளிலும் ஏராளமான திட்டங்களை செய்து வருவதாக கூறி சாதனைகளை பட்டிலிட்டார். எல்லோரும் கல்வி கற்க வேண்டும்,எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை குறித்து பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடுத்து கூறி அனைவரையும் கல்வி கற்க வைக்க வேண்டும் என்றார்.

இந்த பொதுக்கூட்டத்தில், மாநில ஆதிதிராவிட நலகுழு செயலாளர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மாநில நிர்வாகிகள் பிரபு கஜேந்திரன், .ஜெரால்டு, மாவட்ட நிர்வாகிகள் இராஜி, .சீனிவாசன், ஜெயபாலன், நரேஷ்குமார், எத்திராஜ், .விமல்வர்ஷன், மகாதேவன், சன்பிரகஷ், .தேசிங்கு,.ராமகிருஷ்ணன், .ஜெயசீலன், பிரேம் ஆனந்த், தங்கம் முரளி, பொன்.விஜயன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் பவுல், நாகூர்கனி , வார்டு செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் நகரணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்கள்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்