நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கினை கூட்டுறவுத்துறை செயலாளர் ஆய்வு..!
கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சேமிப்பு கிடங்கில் இருந்து நியாய விலை கடைகளுக்கு வரும் பொருட்களின் அளவு குறைபாடுகளுடன் தொடர்ந்து இறக்கினால் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருமமிசை நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கினை ஆய்வு செய்த கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி திருமழிசை பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கில் இருந்து ரேஷன்கடைகளுக்கு தேவையான அரிசி மற்றும் இதர பொருட்கள் இருப்பு வைக்கப்படுகின்றன. இந்தகிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களை கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உணவு பொருட்கள் குறித்து தரம் மற்றும் சேமிப்புக் கிடங்கின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர். கூட்டுறவு மற்றும் உணவு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் பன்முக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் டிசிபியில் கொள்முதல் செய்வதையும், நியாய விலைக் கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்வதும், குடோனில் பணியாளர் பணியாளர்களுடன் சேர்ந்து அதற்கான ஏற்பாடுகளை செய்தல் கூட்டுறவு துறை மூலமாக வழங்கப்படும் கடன்கள் மற்றும் புதிய கட்டிடங்களை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
பருப்பு வகைகளுக்கு தேர்தல் நேரத்தில் டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டதால் அதை சீரமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், சேமிப்பு கிடங்கில் இருந்து நியாய விலை கடைகளுக்கு வரும் பொருட்களின் அளவு குறைபாடுகளுடன் தொடர்ந்து இறக்கினால் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தவறுகள் நடக்கும் போது அதனை மறைக்கவோ, மறுக்கவோ செய்யாமல் நியாயமான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
3.1,லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து இருப்பதாகவும், இதில் 2.8 லட்சம் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தற்போது பிரிண்டிங் செய்வதற்கான அனுமதியை அந்தந்த மாவட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும். இந்த மாதம் இறுதிக்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்றும், கூறினார்.
ரேஷன் அரிசி கடத்தலை பல்வேறு வழிகளில் தடுத்து வருவதாகவும் திருவள்ளூரில் ரயில் மூலமாக கடத்தல் அதிகரித்து வருவதாகவும், கூடிய விரைவில் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் நியாய விலை கடைகளில் இறக்கப்படும் பொருட்கள் தரமாக உள்ளதா என அதிகாரிகள் உறுதிசெய்ய களப்பணியாற்ற வேண்டும் என்றும் கண்டிப்பாக சில தவறுகள் இருப்பதாகவும் அதனை கூடிய விரைவில் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu