வானகரம்: சிமெண்ட் சாலை, கால்வாய், பூங்கா சீரமைக்கும் பணி, தொடங்கி வைத்த எம்எல்ஏ

வானகரம்: சிமெண்ட் சாலை,  கால்வாய்,  பூங்கா சீரமைக்கும் பணி, தொடங்கி வைத்த எம்எல்ஏ
X

திருவள்ளூர் மாவட்டம் வானகரம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

வானகரம் ஊராட்சியில் புதிய சிமெண்ட் சாலை, மழைநீர் கால்வாய், அம்மா பூங்கா சீரமைக்கும் பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

மதுரவாயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வானகரம் ஊராட்சியில் புதிய சிமெண்ட் சாலை, மழைநீர் கால்வாய், அம்மா பூங்கா சீரமைக்கும் பணிகளை இன்று மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி துவங்கி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சக்திவேல், வானகரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா சீனிவாசன், ஊராட்சி செயலாளர் அருள் மற்றும் திமுகவின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிமெண்ட் சாலை, மழைநீர் கால்வாய், அம்மா பூங்கா சீரமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையும் நடைபெற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!