ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை கண்டித்து வெங்கலில் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டித்து வெங்கல் பஜாரில் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
சென்னை பெரம்பூர் செம்பியும் பகுதியில் நேற்று தமிழக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்டராங் தான் புதிதாக கட்டி வரும் வீட்டின் பகுதியில் நின்று பேசி கொண்டிருந்தார்.
அப்போது 3 இரு சக்கர வாகனத்தில் உணவு வழங்கும் ஆடையில் வந்த 6 பேர்.கொண்ட மர்ம கும்பல் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தலை, கழுத்து, உடல் என பல பகுதியில் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்து சரிந்து கீழே விழுந்த ஆர்ம்ஸ் ஸ்ட்ராங்கை அருகில் உள்ளவர்கள் மீட்டு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். அங்கிருந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுப்பப்பட்டது.
இதனை அறிந்த கட்சி தொண்டர்கள் ஆங்காங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் பஜார் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டனம் தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் செய்த முயன்ற போது இதனை ஏற்க மறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்
மேலும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் திருவள்ளூர் பெரியபாளையம் இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu