பள்ளி அருகே ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி

பள்ளி அருகே ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி
X

ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.

பள்ளி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

ஆரிக்கம் பட்டு கிராமத்தில் அரசு பள்ளி அருகே உள்ள பழுதடைந்த குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதி எல்லாபுரம் ஒன்றியம் குருவாயல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆரிக்கம் பட்டு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சுற்று வட்டார பகுதியில் இருந்து பயின்று வருகின்றனர். இந்த பள்ளியையொட்டி சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் கேட்க மேல்நிலைத் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியின் மேற்கூரை இதனை தாங்கி பிடிக்கும் 4 தூண்களில் சிமெண்ட் கான்கிரீட் உதிர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி மிகவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. எனவே இதற்கு மாறாக வேறு இடத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி ஒன்று கட்டி அப்பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இந்த பழுதடைந்த குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என்று பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் இந்த பழுதடைந்த குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டி அகற்றப்படவில்லை. பள்ளி அருகே உள்ளதால் பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். மேலும் சாலை ஓரத்திலே உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பழுதடைந்த இந்த குடிநீர் தொட்டியானது சரிந்து கீழே விழுந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்படுத்தும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே இந்த பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் அப்பகுதியில் வாழும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு