சாலைகளை அடைத்துள்ள தடுப்புகளால் ஆம்புலன்ஸ் நோயாளிகள் அவதி
சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதால் திரும்பிச் செல்லும் ஆம்புலன்ஸ்
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் பகல் 12 மணிவரை அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி முக்கிய நுழைவாயிலாக விளங்கும் குமணன்சாவடி பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் போலீசார் சார்பில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாங்காடு வழியாக சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவ தேவை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லக் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்களும் பல கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டதால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
எனவே பகல் 12 மணி வரை இந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடவேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்துள்ளது. அவசரத் தேவைக்கு இந்த சாலையை திறந்துவிட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu