கொரோனாவை விரட்டியபின் நீட்டுக்கு முற்றுப்புள்ளி: முதலமைச்சர் பேட்டி!

கொரோனாவை விரட்டியபின் நீட்டுக்கு முற்றுப்புள்ளி: முதலமைச்சர்  பேட்டி!
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது.

கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பிறகு நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த நேமம் ஊராட்சிக்குட்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயது நிரம்பியவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வை முதல்வர் துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளரகளை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் பலன் தெரியவருகிறது. தற்போது சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்து வருகிறது. மத்திய அரசு நமக்கான தடுப்பூசி குறைந்த அளவே வழங்கியுள்ளது.

ஙஎனினும் சர்வதேச ஒப்பந்தம் மூலம் தடுப்பூசிகள் பெறப்பட்டதும், இதனை ஒரு மக்கள் இயக்கமாகவே கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வீணாவது ஒரு சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது இரண்டாம் அலை பரவ முந்தைய அரசு முதல் அலையை கட்டுப்படுத்தாதே காரணம். தமிழகம்தான் அதிகப்படியான ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொண்ட மாநிலம். இந்த அரசு சொல்லிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இடையில் இந்த கொரோனா பெரும்தொற்று வந்ததால், இதனை முதலில் சரி செய்துவிட்டு நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுத்தியளித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்