தாமரைப்பாக்கம் ஊராட்சியில் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
X

குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் வருவாய் துறை அலுவலகம் பின்புறம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது

பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் ஊராட்சியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரம் சீர்கேடு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தாமரைப்பாக்கம் சுற்றியுள்ள கிராமங்களான சேத்துப்பாக்கம், குருவாயல், கோடு வெளி, அழிஞ்சிவாக்கம், உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட கிராம மக்கள் நாள் தோறும் அவர்களின் தேவைக்காக தாமரைப்பாக்கம் வந்து செல்வார்கள்.

இந்த நிலையில் தாமரைப்பாக்கத்தில் உள்ள கடைகள், உணவகங்கள், மீன், இறைச்சி கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து நாள்தோறும் வெளியேறும் குப்பைகளை ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்து அவையை தாமரைப்பாக்கம்- பெரியபாளையம் இடையே அம்மண பாக்கம் வருவாய் துறை அலுவலகம் பின்புறம் காலி இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது.

இப்படி கொட்டப்படும் குப்பைகளை சுழற்சி முறையில் தரம் பிரித்து தேவையில்லாத குப்பைகள் தீவைத்து எரிக்கப்படும். மேலும் பெரிய பாக்கம் தாமரைப்பாக்கம் சாலை முக்கியமான சாலை என்பதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாக திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், செங்குன்றம், திருத்தணி, சென்னை, வெங்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன

மேலும் வருவாய் துறை அலுவலகத்திற்கு ஏராளமான கிராம மக்கள் தாங்கள் குறைகளை கூற தேவையான சான்றிதழ் பெறவும் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்வார்கள் இங்கு எரிக்கப்படும் குப்பைகள் இருந்து வெளியேறும் புகையால் கண் எரிச்சல் மூச்சு திணறல். மேலும் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சாலை தெரியாமல் மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே சேகரிக்க படும் இந்து குப்பைகளை வேறு இடத்தில் மாற்றி கொட்ட வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story
Weight Loss Tips In Tamil