பொன்னேரியில் மின்வாரிய தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...

பொன்னேரியில் மின்வாரிய தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...
X

பொன்னேரியில் மின்வாரிய தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மின்வாரிய தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி துணை மின் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின் வாரிய பணியாளர்களுக்கு 3ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனே வழங்கிட வேண்டும், மின் வாரியத்தில் உள்ள 56000 காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், மின்வாரிய ஊழியர்களின் சலுகைகளை பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் BP 2-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.


இதற்கிடையே, சென்னையில் நடைபெற்ற 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், திட்டமிட்டபடி ஜனவரி 10ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். உடனடியாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

மேலும், மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல, மின்வாரியத்தில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதும் பிரதான கோரிக்கையாக உள்ளது.

மின்வாரிய ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 10 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டால் மின் உற்பத்தி மற்றும் மின்விநியோம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என மின் வாரிய ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!