பொன்னேரி பகுதியில் பராமரிப்பின்றி காட்சியளிக்கும் கால்நடை மருத்துவமனை!
பொன்னேரி அருகே ஆரணியில் பராமரிப்பின்றி காட்சியளிக்கும் கால்நடை மருத்துவமனை.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியபாளையம் அருகேயுள்ள ஆரணி பேரூராட்சியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆரணி பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகாமையில் அரசு கால்நடை மருத்துவமனை கடந்த 2012 ஆண்டு ரூபாய் 26. 66,000 மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு ஆரணி மற்றும் சுற்றி உள்ள மல்லியங்குப்பம், மங்கலம்,புதுப்பாளையம், என 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள மக்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய், கோழி, பசுமாடு, ஆடுகள் உள்ளிட்ட நோய் தாக்கினால் இந்த மருத்துவமனைக்கு கொண்டு வந்து தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளை சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
ஆனால், கால்நடை மருத்துவமனை கட்டிடம் மிகவும் பழுதடைந்து கட்டிடத்தின் ஜன்னல்கள் ஆங்காங்கு உடைந்து சீரமைக்காத நிலையில் காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அந்தக் கட்டிடத்திற்கு முன்பு பசுக்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிமெண்ட் ஷீட் ஷெட் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த செட்டின் மேல் ஓட்டுகள் உடைந்து உள்ளன.
மேலும், மருத்துவமனையை சுற்றி அடர்ந்த முட்புதர் மண்டிகள் வளர்ந்து விஷ பூச்சிகளுக்கு இருப்பிடமாக மாறி வருகிறது. மேலும், மருத்துவமனைக்கு அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் கதவு இல்லாததால் அந்தப் பகுதியில் உள்ள குடிமகன்கள் உள்ளே நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பராமரிப்பின்றி காணப்படும் கால்நடை மருத்துவமனையை சீரமைத்து உடைந்த சிமெண்ட் ஓடுகளை மாற்றி சீர் செய்து தர வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu