தேங்கிய மழை நீரை நகராட்சி ஊழியர்கள் மோட்டார் வைத்து வெளியேற்றம்..!

தேங்கிய மழை நீரை நகராட்சி ஊழியர்கள் மோட்டார் வைத்து வெளியேற்றம்..!
X

பொன்னேரி தேரடி ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழை நீரை நகராட்சி ஊழியர்கள் மோட்டார் வைத்து வெளியேற்றினர்

பொன்னேரி நகராட்சியில் தேங்கியுள்ள மழை நீரை நகராட்சி ஊழியர்கள் மோட்டார்கள் மூலம் வெளியேற்றினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணத்தினால் பொன்னேரி தேரடி ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழை நீரை நகராட்சி ஊழியர்கள் மோட்டார் வைத்து வெளியேற்றினர்.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, தாமரைப்பாக்கம், செங்குன்றம், ஆரம்பாக்கம், மீஞ்சூர், திருத்தணி, கனகம்மா சத்திரம், ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி உள்ளிட்ட சுற்றுவட்டார இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது.


இந்த நிலையில் இந்த கனமழையால் பொன்னேரியில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது இதனால் பொன்னேரி தேரடி, ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தேங்கி நின்ற மழைநீரில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மழைநீரில் சிக்கிக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொன்னேரி நகராட்சி ஊழியர்கள் தேரடி, ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தேங்கியுள்ள தண்ணீரை ராட்சத மோட்டார் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு மழை நீரை வெளியேற்றினர். தண்ணீர் வெளியேற்றிய பின்னர் அவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு சிரமங்கள் குறைந்தன. இருந்தாலும் மழை விட்டுவிட்டு பெய்து வருவதால் மீண்டும் மழைநீர் தேங்கும் வாய்ப்புகளும் உள்ளன என்று அப்பகுதி மக்கள் கூறினர். பொன்னேரி தேரடி ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழை நீரை அப்புற ப்படுத்திய நகராட்சி ஊழியர்கள்.



Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil