டேங்கர் ஓட்டுநர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்..!

டேங்கர் ஓட்டுநர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்..!
X

டேங்கர் லாரிகள் ஓடாமல் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புது நகரில் டேங்கர் ஓட்டுநர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி அருகே ஒன்றிய அரசு ஓட்டுநர்களுக்கு எதிராக இயற்றியுள்ள HIT & RUN சட்டத்தை நிரந்தரமாக திரும்ப பெற வலியுறுத்தி பெட்ரோலிய டேங்கர் லாரி ஓட்டுநர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள பாரத் பெட்ரோலியம் முனைய வாயிலில் பெட்ரோலிய டேங்கர் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடினால் பத்தாண்டு காலம் சிறை மற்றும் ஏழு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து புதிய கிரிமினல் சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பெட்ரோலிய டேங்கர் லாரி ஓட்டுநர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


குறைந்த ஊதியம் வாங்கும் ஓட்டுநர்கள் விபத்தை ஏற்படுத்தினால் 7லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என சட்டம் இயற்றியதால் ஓட்டுநர்கள் மன உளைச்சல் ஏற்பட்டு அச்சத்துடன் வாகனங்களை இயக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மோட்டார் தொழிலில் விபத்து என்பது எதிர்பாராத வகையில் நடைபெறும் நிகழ்வு எனவும் தெரிவித்தனர்.

உடனடியாக மத்திய அரசு ஓட்டுநர்களுக்கு எதிராக இயற்றியுள்ள HIT & RUN சட்டத்தை நிரந்தரமாக திரும்ப பெற வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.ஓட்டுநர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பெட்ரோல், டீசல் ஆயில் ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story
latest ai trends in agriculture