பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்துக்குட்பட்ட மடிமை கண்டிகை கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோவில் உள்ளது.
இந்த கோவிலில் காலம் காலமாக அருகிலுள்ள பீரங்கி மேடு கிராமத்தில் கிராமத்தினரும் அடிமை கண்டிகை கிராமத்தினரும் இணைந்து கூட்டு வழிபாடு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்பட்ட கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான செலவை இரு கிராமத்தினரும் சேர்ந்து ஏற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இதற்கு பீரங்கி மேடு கிராமத்தினர் உடன்படாமல் நிர்வாகத்தில் இருந்து விலகி சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் கோவில் புணரமைப்புக்காண முழு செலவையும் மடிமை கண்டிகை கிராமத்தினர் செய்து வருகின்றனர். செப்டம்பர் 9-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் திடீரென பீரங்கி மேடு கிராமத்தினர் கும்பாபிஷேக விழாவில் தங்களை முன்னிலைப்படுத்துமாறு தகராறு செய்து வருவதாகவும்,
இதற்கு தங்கள் தரப்பில் விழாவில் பங்கேற்று வழிபாடு நடத்த எந்தவித தடையுமில்லை என்று உறுதிபட தெரிவித்தும் கும்பாபிஷேக விழாவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் மடிமை கண்டிகை கிராமத்தினர் நேற்று பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வருவாய் கோட்டாட்சியரிடம் இது தொடர்பான கோரிக்கை மனு ஒன்றையும் அவர்கள் அளிந்தனர் ஏற்கனவே இதே போன்று கடந்த 19ஆம் தேதி பீரங்கி மேடு கிராமத்தினரும் புகார் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருவதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது இதனால் மேற்கண்ட இரு கிராமங்களிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu