எல்லை முத்து அம்மன் கோவில் சாட்டையடி திருவிழா கோலாகலம்..!

எல்லை முத்து அம்மன் கோவில் சாட்டையடி திருவிழா கோலாகலம்..!
X

எல்லைமுத்து அம்மன் கோவில் சாட்டையடி திருவிழா.

பொன்னேரி அருகே எல்லைமுத்து அம்மன் கோவிலில் சாட்டையடி திருவிழாவில் பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

பொன்னேரி அருகே பெரியகாவளம் கிராமத்தில் எல்லை முத்து அம்மன் கோவில் சாட்டையடி திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரியகாவனத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ எல்லைமுத்து அம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலின் ஆவணி மாத தீமிதி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டலுடன் துவங்கி நாள்தோறும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

விழாவின் ஒருபகுதியாக நேற்று மாலை மேளதாளம் முழங்க, உடுக்கை சத்தம் ஒலிக்க சாமியாடி தலைமையில் பெண்கள் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம்,பழ வகைகள், புடவை, பூக்கள் உள்ளிட்டவையை சீர்வரிசையை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.


பின்னர் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அம்மனை வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து தீப, தூப, ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய அம்சமான சாட்டையடி திருவிழா நடைபெற்றது.சுமார் பத்தடி நீளம் கொண்ட சாட்டையை பூசாரி சுளீர் சுளீரென சுழற்றி அடிக்க பூங்கரகம், போத்துராஜாவை சுமந்தவர்கள் மற்றும் காப்பு கட்டி விரதமிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாட்டையடியை பக்தியுடன் வாங்கி கொண்டனர்.

இவ்விழாவில் கிராம மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு அம்மனை செய்து சென்றனர்.


Tags

Next Story
ai solutions for small business