பொன்னேரியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பொருட்கள் கொள்ளை...

பொன்னேரியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பொருட்கள் கொள்ளை...
X
பொன்னேரி அருகே இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேயுள்ள சின்னவேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 39). இவா், தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவரின் வீட்டின் ஒரு பகுதியில் வெங்கடேசனும், மற்றொரு பகுதியில் தனியாா் நிறுவன ஊழியா் விஜய்பாபு (35) என்பவரும் வசித்து வருகின்றனா்.

பொங்கல் பண்டிகை கொண்டாட இரண்டு குடும்பத்தினரும் சொந்த ஊருக்குச் சென்றனராம். பின்னர், பொங்கல் விடுமுறை முடிந்து வெங்கடேசன் புதன்கிழமை வீட்டுக்கு வந்து பாா்த்த போது, இரு வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரிய வந்தது.

இதேபோல், விஜயபாபு வீட்டில் 8 சவரன் தங்க நகை திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து, பொன்னேரி காவல் நிலையத்தில் வெங்கடேசன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சம்பவம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!