கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை கைது செய்த போலீசார்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை கைது செய்த போலீசார்
X

பைல் படம்.

பெரியபாளையம் அருகே வெவ்வேறு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணி அகரம் பகுதியில் ஆரணி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அகரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபர்களை போலீசார் மடக்கி சோதனை செய்தார். அப்போது அவர்களிடம் சுமார் 600 கிராம் எடை கொண்ட கஞ்சா போதை பொருள் இருப்பது தெரிய வந்தது.

உடனடியாக அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ஆரணி சுப்பிரமணியம் நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் சிவம்(22), நரேஷ்,(20) என தெரிய வந்தது. இதேபோல் ஆரணி-பெரியபாளையம் சாலை ஆரணி சமுதாயக்கூடம் அருகே நின்று கொண்டிருந்த மற்றொரு நபரை போலீசார் விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்ததில் அவர் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து விசாரணத்தில் அவர் பெரியபாளையம் அருகே சின்ன கிளாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்(21) என்று தெரியவந்தது. பின்னர் இவர்கள் மூன்று பேரும் மீது வழக்குபதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
why is ai important in business