பொன்னேரியில் சட்டக் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை.. போலீஸார் விசாரணை…

பொன்னேரியில் சட்டக் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை.. போலீஸார் விசாரணை…
X

தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் கௌசிக்.

பொன்னேரி அருகே தனியார் சட்டக் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி லட்சுமிஅம்மன்கோவில் 2 ஆவது தெருவை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் கௌசிக் (20). தாம்பரம் அருகே உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு 3 ஆம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில், வழக்கம்போல கௌசிக் நேற்று இரவு வீட்டில் உள்ள தனது அறைக்கு தூங்கச் சென்றுள்ளார்.

இன்று காலை வெகு நேரமாகியும் கௌசிக் வெளியே வராததால் அவரது தாய் கௌசிக்கை எழுப்பச் சென்றுள்ளார். அப்போது, கௌசிக் தனது அறையில் தூக்கிட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்தைக் கண்டு அவரது தாய் அதிர்ச்சியில் கூச்சலிட்டார்.

இதைத்தொடர்ந்து, அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். பின்னர், சிலர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த கௌசிக்கை மீட்டு உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் கௌசிக் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனராம்.

இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டக் கல்லூரி மாணவர் திடீரென தற்கொலை செய்துக் கொண்டதற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. அவரது பெற்றோர் மற்றும் சக மாணவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பொன்னேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், கௌசிக் தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பு ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா? என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கௌசிக் பயன்படுத்திய செல்போனை கைப்பறிய போலீஸார் அதில் உள்ள விவரங்கள் மூலம் ஏதேனும் தகவல் கிடைக்குமா? என்ற கோணத்திலும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!