மீஞ்சூரில் இருந்து பெண் செவ்வாடை பக்தர்கள் மேல்மருவத்தூர் பயணம்...
திருவெள்ளைவாயல் கிராமத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயிலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் மேற்கொண்டனர்.
Melmaruvathur Temple Today News-மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். தமிழகம் முழுவதும் தற்போது பல லட்சம் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து வருகின்றனர். அவ்வாறு விரதம் இருக்கும் பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டு அம்மனை தரிசிப்பது உண்டு.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் இருந்து கடந்த 13 வருட காலமாக பெண்கள் பலர் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். மேலும், அவர்கள் ஆண்டுதோறும் மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி அம்மனுக்கு வேண்டுதல் வழிபாடு நடத்துவது வழக்கம் . அதன் அடிப்படையில் கிராமத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் 40 நாள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.
விரதம் முடிந்த நிலையில், அவர்கள் அனைவரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு வேண்டுதல் காணிக்கைகளை செலுத்த இன்று வாகனங்களில் புறப்பட்டனர் . அதற்கான நிகழ்ச்சி முத்துமாரியம்மன் திருக்கோவிலின் அறங்காவலரும் பூசாரியமான வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இரு முடியினை சுமந்தபடி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்துவதற்கு வாகனத்தின் மூலம் மேல் மருவத்தூர் புறப்பட்டுச் செனன. அவர்களை வழிநடத்த விஜயா பாஸ்கரன் என்பவர் அனைவரையும் அரவணைத்து சென்றார். நிகழ்ச்சியில் திரளான கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu