அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்..!

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா  மிதிவண்டிகள் வழங்கல்..!
X

.அரசு பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது.


காட்டூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை பொன்னேரி எம் எல் ஏ துரை சந்திரசேகர் வழங்கினார்.

பொன்னேரி அடுத்த காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த காட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் 76 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன், பள்ளியின் தலைமை ஆசிரியர் மரகதம், உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர். மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் காணியம்பாக்கம் ஜெகதீசன், ஒன்றிய கவுன்சிலர் நந்தினி, துணைத் தலைவர் ரேவதி சண்முகசுந்தரம், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் பார்த்திபன்,ரமேஷ்,முனுசாமி,குணசேகர், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அதானி அறக்கட்டளையின் சார்பில் காட்டூர் ஏரிக்கரையில் 1500 பனை விதைகளை நடும் விழாவில் கலந்துகொண்டு பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகளை நட்டார்.

இதில் துரை சந்திரசேகரன் பேசுகையில், தற்போது செயல்பட்டு வரும் திமுக அரசு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதில் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், இது மட்டுமல்லாமல் சமீபத்தில் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்தி வருகிறது, என்றார். இதில் அத்திப்பட்டு புருஷோத்தமன் உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story