பொன்னேரியில் நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் விநியோகம்..!
நிவாரண நிதிக்காக வழங்கப்பட்டு வரும் டோக்கன்.
பொன்னேரியில் புயல் நிவாரண உதவியை பெறுவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள் தொடக்கம். ஞாயிறு முதல் நிவாரணத் தொகையை வழங்கும் வகையில் தேதி, நேரமிட்டு டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் வீசிய மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்தும், பொருட்களை சேதப்படுத்தியும், நெற்பயிர்கள், படகுகள் சேதமடைந்தன. இந்நிலையில் 4மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 6000 நிவாரண உதவியாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். பல இடங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் முறையாக வேலை செய்யாததால் நியாய விலைக்கடைகள் மூலம் நிவாரண தொகை வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்நிலையில் நிவாரண உதவிகள் பெறுவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள நியாய விலைக் கடையில் டோக்கன் விநியோகித்து வருகின்றனர். குடும்ப அட்டையைக் கொண்டு வருபவர்களின் விவரங்களை சரிபார்த்து வரும் 17ஆம் தேதி ஞாயிறு முதல் தேதி, நேரமிட்டு டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பிட்ட தேதி, நேரத்தில் நியாய விலை கடைக்கு குடும்ப அட்டை, டோக்கனுடன் வந்து புயல் நிவாரண நிதியை பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu