பேரிடர் குறித்து சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு விளக்கம் செய்து காட்டிய பொன்னேரி தீயணைப்பு வீரர்கள்.
பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் தொண்டு நிறுவனம் சார்பில் பேரிடர் குறித்து சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட பழவேற்காட்டில் அட்சுவா தொண்டு நிறுவனம் சார்பில்பேரிடர் பொறுப்பு மற்றும் இடர் குறைப்பு திட்டத்தின்படி பேரிடர் குறித்து சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அட்சுவா தொண்டு நிறுவனத் தலைவர் சேவா.எஸ்.ஏ.செல்லதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்னேரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் சம்பத் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பேரிடர் குறித்து பேசினர்.
பெருமழை,வெள்ளநீர்,புயல், சூறாவளி காற்று,வீட்டில் கேஸ் மற்றும் மின்சாரம் சார்ந்த தீவிபத்து,நிலநடுக்கம்,போர் உள்ளிட்ட பேரிடர் குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றி கொள்ளக்கூடிய வழிமுறைகள் குறித்தும் செய்முறை விளக்கம் அளித்தனர்.
பழவேற்காடு பகுதி தன்னார்வலர்கள் பேரிடர் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.மேலும் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க மற்றும் குளிக்க செல்லும் போது தவறி விழுந்தவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்த பயிற்சி விளக்க ஒத்திகையை பழவேற்காடு அட்சுவா பேரிடர் மீட்பு குழுவினர் செய்து காட்டிய விதம் அனைவரும் பாராட்டுத்தக்கதாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பழவேற்காடு மீன்வளத்துறை ஆய்வாளர் பாரதிராஜா,திருப்பாலைவனம் காவல்துறை தலைமை காவலர் தனபால், உள்ளிட்ட ஏராளமான உள்ளூர் மக்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu