அங்கன்வாடி மையம் திறக்க ஆர்ப்பாட்டம்!

அங்கன்வாடி மையம் திறக்க ஆர்ப்பாட்டம்!
X
திருப்பாலைவனம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் திறக்க வலியுறுத்தி குழந்தைகளின் பெற்றோர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருப்பாலைவனம் ஊராட்சிக்குட்பட்ட காஞ்சிவாயலில் 2019 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 3 ஆண்டுகளாக இன்னும் திறக்கப்படாத அங்கன்வாடிமைய கட்டிடம் முன்பு குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பெண்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூர் மாவட்டம்,திருப்பாலைவனம் ஊராட்சி சுமார் 2500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட காஞ்சி வாயல் கிராமத்தில் 2019 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.

காஞ்சிவாயல் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர்.இக்குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடமும் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என கூறப்படுகிறது இதனை எடுத்து இந்த கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர் இன்னும் ஊராட்சி மன்ற அலுவலகத்திடம் கட்டிடத்தை ஒப்படைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.


வருகின்ற வடகிழக்கு தற்போது பெய்து வரும் பருவமழை காலத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு சென்று பயில்வதற்கு விரைவில் கட்டிடத்தை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறி கொட்டும் மழையில் அப்பகுதி குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பெண்கள் அங்கன்வாடி மையம் அன்பு கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த ஊராட்சி நிர்வாகம் இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவித்து விரைவில் திறக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் அமைதியாக கலந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!