ஜூஸில் சிலிக்கான் ஜெல் ஐஸ் கலந்து குடித்த சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!

ஜூஸில் சிலிக்கான் ஜெல் ஐஸ் கலந்து குடித்த சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!
X

சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள்.

ஆரணியில் ஜூஸில் ஒத்தடம் கொடுக்கப் பயன்படும் சிலிக்கான் ஜெல் ஐஸ் கலந்து குடித்த 13 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொன்னேரி அருகே எலுமிச்சை ஜூஸில் சிலிக்கான் ஜெல் ஐஸ் கலந்து குடித்த 13சிறுவர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஐஸ் ஒத்தடம் கொடுக்க பயன்படும் என்பது தெரியாமல் ஐஸ் கட்டியை கலந்து குடித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், பொன்னேரி அருகே ஒத்தடம் கொடுக்க பயன்படும் ஐஸ்கட்டியை ஜூஸில் கலந்து குடித்த 13 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆரணி தமிழ் காலனியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் விடுமுறை தினமான இன்று தங்களது வீட்டின் அருகே இருந்த மரத்திலிருந்து எலுமிச்சம் பழங்களை பறித்து ஜூஸ் தயாரித்து உள்ளனர். அருகில் இருந்த ஒருவரது வீட்டில் ஃப்ரிட்ஜில் இருந்த ஐஸ்கட்டி பாக்கெட்டை ஜூஸில் கலந்து அனைவரும் குடித்துள்ளனர்.

சிறிது நேரத்தில் ஐஸ்கட்டி பாக்கெட்டை பார்த்தபோது அது ஒத்தடம் கொடுக்கப் பயன்படும் சிலிக்கான் ஜெல் ஐஸ் என்பது தெரிய வந்தது. தவறுதலாக ஐஸ் கட்டியை கலந்து குடித்ததை அறிந்த சிறுவர்கள் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து ஆரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்தனர்.

அதைத்தொடர்ந்து அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 13 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தவறான ஐஸ் கட்டியை ஜூஸில் கலந்து குடித்தவர்களுக்கு தொடர்ந்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒத்தடம் கொடுக்க பயன்படும் ஐஸ்கட்டியை சிறுவர்கள் ஜூஸில் கலந்து குடித்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடுமுறையில் சிறுவர்கள் வீட்டில் இருக்கும்போது பெற்றோர் கொஞ்சம் கவனம் எடுக்கவேண்டும். குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? எங்கு விளையாடுகிறார்கள் போன்றவைகளை அவ்வப்போது கண்காணிக்கவேண்டும். அப்படி கண்காணித்தல் இதைப்போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கமுடியும்.

Tags

Next Story