பொன்னேரியில் திமுக பாக முகவர்கள் கூட்டம்..!

பொன்னேரியில் திமுக பாக முகவர்கள் கூட்டம்..!
X

பொன்னேரியில் நடந்த திமுக பாக முகவர்கள் கூட்டம்.

பொன்னேரியில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம் எல் ஏ .ஜே. கோவிந்தராஜன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் அமுதரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

வரலாறை திரித்து அழிக்கத் துடிக்கும் பாஜகவை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுறச்செய்ய வேண்டும் என்று பொன்னேரியில் பாக முகவர்கள் கூட்டத்தில் திமுக மாணவர் அணி துணை செயலாளர் அமுத அரசன் பேச்சு.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திமுக பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், மாநில மாணவர் அணி துணை செயலாளர் அமுதரசன் ஆகியோர் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கான பணிகள் குறித்து எடுத்துரைத்துனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்களை சந்தித்து எவ்வாறு வாக்குகளை பெறுவது, மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள், வாக்குச்சாவடி மையங்களில் பாக முகவர்களின் முக்கிய பங்கு குறித்து அப்போது அறிவுறுத்தினர்.

இந்த நிகழ்வில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் அமுதரசன் பேசுகையில்,

வரலாறை திரித்து அழிக்கத் துடிக்கும் பாஜகவை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுறச் செய்ய வேண்டும் என தெரிவித்தார். குஜராத், உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாட புத்தகங்களில் ஆர்.எஸ்.எஸ்.ஐ சேர்ந்த நாதுராம் கோட்ஸே துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்ட போது தேசத்தந்தை மகாத்மா காந்தி குறுக்கே சென்று குண்டு பாய்ந்து உயிரிழந்ததாக மாணவர்களுக்கு வரலாறை திரித்துக் கற்றுக் கொடுக்கப்பட்டு வருவதாக சாடினார்.

பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்த சாவர்க்கர் குறித்தும் வரலாறை திரித்து மாணவர்களுக்கு பாஜக அரசு போதித்து வருவதாக சாடினார். நாட்டில் அனைத்து மக்களுக்கும் நன்கு தெரிந்த வரலாறை திரித்து அழிக்கத் துடிக்கும் பாஜ அரசை நாடாளுமன்ற தேர்தலில் கட்டாயம் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என கேட்டு கொண்டார்.

முன்னதாக நீட் நுழைவு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்புவதற்காக நிர்வாகிகள் கையெழுத்திட்டு மாவட்ட செயலாளரிடம் வழங்கினர். இதில் மாவட்ட அவைத் தலைவர் பகலவன, பொன்னேரி நகர மன்ற தலைவர் பரிமள விஸ்வநாதன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!