காட்டன் சூதாட்டத்தில் 5 பேர் கைது!

காட்டன் சூதாட்டத்தில் 5 பேர் கைது!
X
ஆரணியில் அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5. பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆரணி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு:

ஆரணி பஜார் வீதியில் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

5 பேர் கைது:

சந்தேகத்துக்கிடமாக செல்போன் மூலம் நம்பர் எழுதிக் கொண்டிருந்த 5 நபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் ஆரணி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 52), நாகராஜ் (வயது 60), முரளி (வயது 60), கோடீஸ்வரன் (வயது 60), சர்யையா (வயது 63) என்பதும், இவர்கள் அனைவரும் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்:

குற்றச்செயலில் ஈடுபட்ட 5 நபர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும், சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட 4 செல்போன்கள், 1 லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தீவிர விசாரணை:

இதுகுறித்து 5 பேர் மீதும் ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து, காட்டன் சூதாட்டத்தின் முக்கிய பிரமுகர்கள் யார் யார் என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களின் குற்றச்சாட்டு:

"திரு வி கையில் இந்த காட்டன் சூதாட்டம் தடை செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகியும் இன்னும் சிலர் இந்த சூதாட்டத்தில் அப்பாவி கூலித் தொழிலாளர்களையும் ஆசை வார்த்தை காட்டி அவர்களை ஈடுபடுத்த செய்கின்றனர். நாள் முழுவதும் கூலி வேலைக்கு சென்றால் 300 முதல் 400 ரூபாய் கிடைக்கும்.

கூலி தொழிலாளர்களை குறி வைத்து இந்த காட்டன் சூதாட்டம் கும்மிடிப்பூண்டி, ஆரணியில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க வேண்டிய காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை" என அப்பகுதி மக்கள் சிலர் குற்றம் சாட்டினர்.

கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

இது போன்று அரசால் தடை செய்யப்பட்ட சூதாட்டங்களில் பொது மக்களை ஈடுபடுத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டன் சூதாட்டம் போன்ற சமூக விரோத செயல்களை ஒழிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களும் இது போன்ற சூதாட்டங்களில் ஈடுபடாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

Tags

Next Story