சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது
X

பைல் படம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்

பெரியபாளையம் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற 16வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது. சம்பவம் தொடர்பாக கைகலப்பில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 6பேர் கைது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணி பனப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றி வந்த பிரவீன்ராஜ் (25) என்ற இளைஞர் அதே சூளையில் பணியாற்றியவர்களின் 16வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்க சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் சென்று நடந்ததை கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் பிரவீன்ராஜை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பிரவீன்ராஜின் உறவினர்கள் செங்கல் சூளைக்கு வந்து சிறுமியின் உறவினர்களை தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பிரவீன்ராஜ் மீது ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதே போல அடிதடியில் ஈடுபட்ட இரு தரப்பை சேர்ந்த சதிஷ், மூர்த்தி, குமார், கிஷ்டன், மணிராஜ், ஜான் பீட்டர் ஆகிய 6பேரை ஆரணி போலீசார் கைது செய்தனர். போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரவீன்ராஜ், அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட 6பேர் என அனைவரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அனைவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.


Tags

Next Story
ai solutions for small business