கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
மின்சாரம் வழங்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஜி.ஆர்.கண்டிகை கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இதன் அருகே சூரவாரி கண்டிகை, புதுராஜா கண்டிகை, மேடு, ஆகிய கிராமங்கள் உள்ளன.
இங்கு கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, பெரியபாளையம், திருத்தணி, ஆவடி, பள்ளிப்பட்டு, புழல், சோழவரம் ஆகிய பகுதிகளில் மரங்கள் மின் கம்பங்கள் மீது சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து கிடக்கின்றன. மேலும் தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த காரணத்தினால் மக்களுக்கு உணவு, குடிதண்ணீர் உள்ளிட்ட மற்றும் அடிப்படை வசதிகளுக்கு தவித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள அரசு துறை அதிகாரிகள் அவர்களை மீட்டு முகாம்களை தங்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூராவளி கண்டிகை பகுதியில் கடந்த 5 நாட்களாக மின்சாரம் இல்லாமல் குடிநீர் மற்றும் உணவுக்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகினர். இது சம்பந்தமாக மின்சாரத்துறை அதிகாரியிடம் பலமுறை மின்சாரம் எப்பொழுது வரும் என கேட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தினால் அப்பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார் தலைமையில் புதுராஜா, கண்டிகை சூராவூரணி கண்டிகை பகுதிகளை சேர்ந்த கிராம மக்களுடன் கவரப்பேட்டை- சத்தியவேடு செல்லும் சாலையில் மின்சாரம் வழங்க கோரி மின்வாரியத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மற்றும் லாரிகளை சிறைப்பிடித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்த சிப்காட் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது ஐந்து தினங்களாக எங்கள் பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது இதனை அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று கூறினர்.
சாலை மறியல் குறித்த தகவல் தெரிவித்ததும் ஒரு மணி நேரம் கழித்து அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் உதவி பொறியாளர் பொதுமக்களிடம்பேச்சுவார்த்தை நடத்தினர். மின்சார அதிகாரிகள் சில பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் வழங்குவதற்கு காலம் தாமதம் ஆகும் என்று கூறினர்.
இதற்கு பொதுமக்கள் அப்பகுதி ஒட்டி உள்ள தொழிற்சாலைகள் மட்டும் எப்படி மின்சாரம் வழங்கப்பட்டது? என அதிகாரிகளும் சரமாரியாக கேள்வி கேட்டு அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மின்விநியோகம் செய்வதற்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu