உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி:வென்றவர்களுக்கு எம்எல்ஏ பரிசளிப்பு

உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி:வென்றவர்களுக்கு எம்எல்ஏ பரிசளிப்பு
X

 அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னிகைப்பேரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி ஜே கோவிந்தராஜன் பரிசுகளை வழங்கினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும் இளைஞர்மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் 16 அணிகள் பங்கு பெற்றன இந்த போட்டிகளில் கண்ணிகைப்பேர் அணி முதலாவது இடமும் இரண்டாவது இடத்தில் ஆவடி அணியும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சத்திய வேலு தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினரும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.ஜே. மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி கே.வி. வெங்கடாசலம், ஒன்றிய அவைத்தலைவர் டி கே முனி வேல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் லோகேஷ்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வீர மணிகண்டன், நிர்வாகிகள் வினோத், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிப்பூண்டி எம் எல் ஏ டி.ஜே.கோவிந்தராஜன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளை பாராட்டி, முதலிடம் பிடித்த கன்னிகை பேர் அணிக்கு ரூபாய் 25,000 காசோலையும் கோப்பையும் வழங்கினார் இரண்டாவது பரிசு ஆவடி அணிக்கு ரூபாய் 15000 காசோலையும் கோப்பையும் வழங்கினார்.

இதில் நிர்வாகிகள், வினோத்,பழனி,மணிவாசகம்,விஜய்,கார்த்திக்,பாலாஜி,பிரேம்குமார், நாகராஜ், ரஜினி,விமல், ராஜ்குமார், ராமசாமி, அன்பு ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுரேஷ் செய்திருந்தார்.


Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா