அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து இரண்டு பசு மாடுகள் உயிரிழப்பு

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து இரண்டு பசு மாடுகள் உயிரிழப்பு
X

பைல் படம்

பெரியபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியில் அறுந்த கிடந்த மின் கம்பியை மிதித்து இரண்டு பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

பெரியபாளையம் அருகே அம்பேத்கர் நகர் பகுதியில் கீழே அறுந்து கிடந்த உயிர் அழுத்த மின்சார கம்பியை மிதித்து 2 பசுமாடுகள் உயிரிழந்தன.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 40) இவர் சொந்தமாக மாடுகள் வளர்த்து சிறிய அளவில் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் சுகுமார் மாடுகளை மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்சார கம்பியை

2 பசுமாடுகள் மிதித்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. அப்போது அங்கு மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த சுகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் மின்வாரிய ஊழியர்கள் அம்பேத்கர் நகர் பகுதிக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்த மின் கம்பிகளை மின்வாரிய அதிகாரிகள் முறையாக சீரமைக்காததால் இதுபோன்று அடிக்கடி கால்நடைகள் உயிரிழப்புக்கு காரணம் எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு சேதமடைந்த மின்கம்பிகளை அகற்றி புதிய உயிர் அழுத்த மின் கம்பிகளை பயன்படுத்த கோரிக்கை வைக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் தொ தொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future