பெரியபாளையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

பெரியபாளையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
X

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சார்பில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ. கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது

நிகழ்ச்சியில் அனைவரையும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினர்மான பி. ஜெ. முர்த்தி வரவேற்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கும்மிடிப்பூண்டி கி.வேணு, இ.ஏ.பி. சிவாஜி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, சி. எச். சேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தேவேந்திரன், பொன்னேரி நகராட்சி தலைவர் பரிமளம், பகலவன், நிலவழகன், அன்புவாணன், கோதண்டம், சுரேஷ், கதிரவன், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்திய வேலு, கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர்கள் மு.மணிபாலன், கி. வே. ஆனந்தகுமார், மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், சுகுமாறன், செல்வசேகரன், சந்திரசேகர், ரவி, ரமேஷ் ராஜ், அப்துல் ரசித், வெங்கடேசன், , மோகன்ராஜ், ரவிக்குமார், ராமமூர்த்தி, அபிராமி குமரவேலு, கிருஷ்ணாமுர்த்தி, லோகேஷ், தில்லை குமார், வெற்றி, சித்ரா முனுசாமி, வழக்கறிஞர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர் டிஜே கோவிந்தராஜன் பேசுவதில் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கட்சியின் கொடியேற்றி ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள் நலத்திட்டங்கள் வழங்கிடவும், அத்தோடு ஆதரவற்ற அனாதை இல்லங்களுக்கு அன்னதானம் மற்றும் உதவிகள் செய்தல், தமிழக முதல்வரின் மு. க.ஸ்டாலின் ஓராண்டு சாதனை குறித்து தெருமுனை கூட்டங்கள் நடத்தவும், கழக வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்

இதில் கழக நிர்வாகிகள் தனசேகர், கோகிலா, விமல் ராஜ், ராஜா மாநில நிர்வாகிகள், பொறுப்பு குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் பேருர் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட கலந்துகொண்டனர்.


Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு