தூய்மை பணியாளர்களுக்கு மூன்று சக்கர மின்கலன் வண்டிகள்: எம்எல்ஏ -க்கள் வழங்கல்

தூய்மை பணியாளர்களுக்கு மூன்று சக்கர மின்கலன் வண்டிகள்: எம்எல்ஏ -க்கள் வழங்கல்
X

பெரியபாளையம் அருகே தூய்மை பணியாளர்களுக்கு மூன்று சக்கர மின்கலன் வண்டிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் டிஜே கோவிந்தராஜன், ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் வழங்கினர்.

எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 10 ஊராட்சிகளைசேர்ந்த தூய்மை பணியாளர் களுக்கு மூன்று சக்கர மின்கலன் வண்டிகள் வழங்கினர்

பெரியபாளையம் அருகே 26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று சக்கர மின்கலன் வண்டிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் டிஜே கோவிந்தராஜன், ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் வழங்கினர்.

திருவள்ளுர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 15 ஆம் நிதி குழு மற்றும் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் சுமார்26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 10 ஊராட்சிகளுக்கு மூன்று சக்கர மின்கல வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜே. கோவிந்தராஜன், மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ .கிருஷ்ணசாமி, ஆகியோர் கலந்துகொண்டு பெரியபாளையம், கண்ணிகைபேர், ஆத்துப்பாக்கம், கன்னிகாபுரம்,உள்ளிட்ட 10 ஊராட்சிகளைசேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு மூன்று சக்கர மின்கலன் வண்டிகள் வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நடராஜன் சத்தியமூர்த்தி, துணைபெருந்தலைவர் சுரேஷ், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர்கள் பிஜே.மூர்த்தி, ஆ.சக்திவேலு, திமுக நீர்வாகிகள் விஜே.சீனிவாசன்,தண்டலம் கிருஷ்ணமூர்த்தி,கே.வி. லோகேஷ், வெங்கல் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் தாமரைப்பாக்கம் கீதா துளசிராமன், கன்னிகைப் பேர் காயத்ரி உதயகுமார், தண்டலம் புவனேஸ்வரி ரவி, பெரியபாளையம் லட்சுமி திருமலை, ஆத்துப்பாக்கம் நிர்மலா, ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!