திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்
X

பெரியபாளையம் அருகே காக்கவாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

பெரியபாளையம் அருகே காக்கவாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் விடுதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் திமுக மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ் வரவேற்றார்.

எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜெ.மூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மோகன்பாபு, முரளிதரன், சங்கர்,யுவராஜ் ,கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் மாலிக், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பிரபு கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.பின்னர் இளைஞரணி உறுப்பினர் படிவம் அமைப்பாளர்களிடம் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்தற்கு நன்றி தெரிவிப்பது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை இளைஞரணி சார்பில் கொண்டாடுவது. இளைஞரணியின் 2 வது மாநில மாநாட்டு பணிகள் மற்றும் இல்லந்தோறும் இளைஞரணி உறுப்பினர்கள் சேர்த்தல். செப்டம்பர் 15 தேதி கும்மிடிபூண்டி மற்றும் பொன்னேரி தொகுதியில் கலைஞர் பயிலகம் திறப்பது. சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு வாழ்த்துகளும் நன்றியும் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் மாநில அயலக அணி துணைச்செயலாளர் கன்னிகை ஜி.ஸ்டாலின், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி. உமா மகேஸ்வரி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட நிர்வாகிகள் கதிரவன், ரமேஷ் ,சம்பத் ,பாஸ்கர் சுந்தரம் , ஒன்றிய செயலாளர்கள் ஜான் பொன்னுசாமி, செல்வசேகரன், வெங்கடாசலபதி , அப்துல் ரஷீத், அபிராமி குமரவேல், தில்லைகுமார் மற்றும் ஒன்றிய, , நகர, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.





Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!