மூதாட்டியிடம் தங்க நகை வெள்ளி பொருட்கள் திருட்டு: போலீஸ் விசாரணை

மூதாட்டியிடம்  தங்க நகை வெள்ளி பொருட்கள் திருட்டு: போலீஸ் விசாரணை
X
நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்த தங்கம் வெள்ளி நகைகளை திருடிச்சென்றனர்

கும்மிடிப்பூண்டி அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்கச் சங்கிலி பீரோவில் இருந்த 100 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தில் வாணி செட்டி பகுதி தெருவில் வசித்து வருபவர் மோகன் (63), இவரது மனைவி பத்மா(54). கணவன் மனைவி இருவரும் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்த பீரோவின் கதவை உடைத்து அதில் இருந்த 100 கிராம் வெள்ளி பொருட்களும் கொள்ளையடித்ததோடு, தூங்கிக் கொண்டிருந்த பத்மாவின் கழுத்தில் அணிந்து இருந்த எட்டு பவுன் தங்க செயினை அறுத்துக் கொண்டு சென்றபோது, தூக்கம் கலைந்த பத்மா கூச்சலிட்டார்.

மனைவியின் அலறல் சப்தம் கேட்டு கண் விழித்த பத்மாவின் கணவர் மோகன் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டு மர்ம நபர்களை நீண்ட தொலைவுக்கு விரட்டிச் சென்றனர். ஆனால் மர்ம நபர்கள் பிடிபடாமல் தப்பிச் சென்றனர். இது குறித்து மோகன் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பகுதியில் விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்கு பதிந்து, இந்த சம்பவத்திற்கு காரணமான மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.




Tags

Next Story
future ai robot technology