மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் காய்ச்சல் : பொதுமக்கள் அவதி

மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் காய்ச்சல் : பொதுமக்கள் அவதி
X

திருவள்ளூர் மாவட்டம்,எல்லாபுரம் ஒன்றியம்,மாளந்தூர் ஊராட்சியில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து தேங்கி நிற்கும் அவலம். 

மாளந்தூர் காலனியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் காய்ச்சல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம்,எல்லாபுரம் ஒன்றியம்,மாளந்தூர் ஊராட்சியில் காலனியில் உள்ளகாந்தி நகர் முதல் குறுக்குத் தெரு, 2-வது குறுக்கு தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவ மழையால் பெய்த கன மழையால் மழைநீர் தேங்கி நிற்கின்றது.

இத்துடன் இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் கலந்து தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிக அளவு ஏற்பட்டுள்ளது.இதனால் கொசுக்கடிக்கு ஆளான பொதுமக்கள் ஏராளமானோர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே,இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோருக்கு பொதுமக்கள் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில்,இதே ஒன்றியத்திலுள்ள பேரண்டூர் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏராளமான பொதுமக்கள் வாந்தி-பேதி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில்,கடந்த சில நாட்களாக மாளந்தூர் காலனியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே,பேரண்டூர் பிரச்சினை மாளந்தூரில் ஏற்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture